Princiya Dixci / 2017 ஜனவரி 22 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, நிலாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் துவிச்சக்கரவண்டியினைச் செலுத்திச் சென்ற நபரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, இன்று (22) உத்தரவிட்டார்.
திருகோணமலை, சாம்பல்தீவுப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், மதுபோதையில் துவிச்சக்கரவண்டியில் சாம்பல்தீவுப் பகுதிக்குச் இரவு வேளையில் சென்ற வேளை, அப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் சனிக்கிழமை (21) கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகநபர், மதுபானம் வைத்திருந்த வழக்கொன்றும், ஏற்கெனவே நீதிமன்றில் நடைபெற்று வருவதாக, நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago