Princiya Dixci / 2017 ஜனவரி 21 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது மனைவியோடு சண்டையிட்டு மனைவியின் தலைமுடியினை வெட்டிய நபரை, எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று (20) உத்தரவிட்டார்.
வாழைச்சேனை, மீராவோடைப் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், தனது மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகத்தில் தாக்கியுள்ளதோடு, தலைமுடியினை வெட்டி மொட்டையடித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago