2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மனைவி கொலை: கணவன் கைது

Editorial   / 2018 மே 05 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் இன்று (05) அதிகாலை கணவனொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று முருகன் கோயிலடியைச் சேர்ந்த, நல்லிதன் தமயந்தி (வயது- 26) என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக, மனைவியை கணவன் தாக்கி கொலை செய்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரான ராசய்யா ரேஹனை (வயது- 34) கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X