2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மான்களைப் பாதுகாப்பதற்கு பூங்கா

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூன் 05 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில், சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அங்கு கட்டாக்காலிகளாகத் திரியும் மான்களைப் பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, திருகோணமலை நகரசபை தவிசாளர் என்.ராசநாயகம்,இன்று (05) தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

இதற்கமைய, அவரது ஆலோசனையின் பேரில் மான்களுக்காக பூங்கா ஒன்றை நிர்மாணிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக, தவிசாளர் தெரிவித்தார்.

திருகோணமலை பகுதிகளில், கடந்த காலங்களாக உணவு தேடி செல்லும் நிலையில், பல மான்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனவெனவும் தவிசாளர் சுட்டிகாட்டினார்.

இதற்கமைய, நகரை அழகு படுத்தும் மான்களைப் பாதுகாப்பதற்கு புற்களுடனான பூங்கா அவசியமாகுமெனத் தெரிவித்தார்.

அத்துடன், திருகோணமலையில் வீசப்படும் மரக்கறிகளை இந்த மான்களுக்கு உணவாக வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X