Editorial / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்
அரசாங்கம் அனுமதித்ததற்கு மேலதிகமாக பியர் போத்தல்களைத் தங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்ல வைத்திருந்த குற்றச்சாட்டில், குடும்பஸ்தர்கள் இருவர், நேற்று (11) மாலை அநுராதபுரச் சந்தியில் வைத்து, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, உப்புவெளி, வரோதய நகரைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தரிடமிருந்து 625 மில்லிலீற்றர் அடங்கிய 15 பியர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு, கும்புறுபிட்டி, நாவச்சோலை சேர்ந்த 25 வயதுடைய குடும்பஸ்தரிடமிருந்து 500 மில்லிலீற்றர் அடங்கிய 50 பியர் டின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகலையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சந்தேகநபர் இருவரும், திருகோணமலை தலைமையாகப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026