Princiya Dixci / 2016 ஏப்ரல் 17 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமாபுரப் பகுதியில் நேற்று சனிக்கிழமை (16) இரவு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி கே.டீ.கே.ருவன்குமார (வயது 31) என்பவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.
சோமாபுரப் பகுதியிலுள்ள வீதியொன்றில் நண்பர் ஒருவருடன் இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென வீதியைக் குருக்கருத்த யானை இவரைத் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
8 minute ago
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
2 hours ago