2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ரூ. 15 இலட்சம் மோசடி: ஒருவருக்குப் பிணை

Thipaan   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை பிரதேசத்தில் பதினைந்து இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபரொருவரை, ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்லுமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்றுப் புதன்கிழமை (14) உத்தரவிட்டார்.                                 

அலுத்ஹேட்டி வீதி, கற்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு பிணையில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.                   

குறித்த நபர், திருகோணமலை பிரதேசத்தின் கடைகளுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் பொருட்கள் வழங்கி வந்த நிலையிலே மூதூர் பகுதியில் வியாபாரி ஒருவரிடம் பொருட்கள் பெற்றுக்கொடுப்பதாக பதினைந்து இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்று  தலைமறைவாகியுள்ளார்.                

வியாபாரி குறித்த நபருக்கெதிராக செய்த முறைப்பாட்டையடுத்து, செவ்வாய்கிழமை (13) அவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை, நேற்று புதன்கிழமை (14) மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.            


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X