Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
அனைவருக்கும் மன அழுத்தினைக் குறைக்கும் வகையிலான விளையாட்டுப் போட்டியொன்று, சனிக்கிழமை (17) மாலையில், திருகோணமலை, கந்தளாய் அல்-ஜாயா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்யதிருந்தது.
இவ்விளையாட்டினை, கந்தளாய் அல்-ஜாயா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.சி.எம்.ஜவாஹிர் தலைமையில் அல்-தாரீக் விளையாட்டு மைதானத்தில் வெகுவிமர்சையாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில், வழுக்குமரம் ஏறுதல், வெச்சிக்க வெச்சிக்க பூமா, சைக்கிள் சவாரி, ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்கான சூப்பியில் மென்பானம் அருந்துதல், கயிறு இழுத்தல் போட்டி, சிறுவர்களுக்கான பலூன் சேகரித்தல் மற்றும் இரவுநேரக் கலை நிகழ்சிகள், நாடகம், கஸீதாப்பாடல் , வில்லுப்பாட்டு என்பன இடம்பெற்றதுடன். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இவ்விழாவில் பிரதம அதிதியாக கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவானும், கந்தளாய் முன்னால் பிரதேசசபை உறுப்பினருமான எம்.எஸ்.மதார், மற்றும் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், அரச ஊழியர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
1 hours ago
27 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
27 Jul 2025