Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 23 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டிப் பரீட்சையின் வெட்டுப்புள்ளியை குறைக்குமாறு கோரி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் பிரேரணையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
கிழக்கு மாகாணசபை அமர்வு, நாளை (24) நடைபெறவுள்ளபோது, இப்பிரேரணையைச் சமர்ப்பிக்கவுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரி ஆசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளில் காணப்படும் 1134 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கு கிழக்கு மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவால் கடந்த 01.08.2016 அன்று விண்ணப்பங்கள் கோரப்பட்டு, சுமார் 5701 பட்டதாரிகள் தோற்றினர். 16.01.2017 அன்று வெளியிடப்பட்ட 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற சுமார் 305 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் .
மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைவாக ஏனைய மாகாணங்களான வட, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் 30 அல்லது 35ஆக வெட்டுப்புள்ளியாக குறைத்து உள்ளீர்க்க கோரியும் அதன் மூலம் மாகாண பாடசாலைகளில் இன்னும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கோரி அவசர பிரேரணை ஒன்றை முன் வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago