Thipaan / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் குறைந்த வயதுடைய இருவருக்கு, வீட்டில் தங்குவதற்கு அறை ஒதுக்கிக் கொடுத்த நபரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று வெள்ளிக்கிழமை(16) உத்தரவிட்டார்.
தோப்பூர், பாட்டாளிபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தனது வீட்டில், பதின்மூன்று வயதுடைய சிறுமிக்கும் மற்றும் 22 வயதுடைய இளைஞருக்கும் தங்குவதற்கு இடம்கொடுத்துள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர், வியாழக்கிழமை (15) கைது செய்யப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
2 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
20 Mar 2026
20 Mar 2026