Thipaan / 2017 மார்ச் 10 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை - கண்டி பிரதான வீதியின் 93ஆம் கட்டை சந்தியில், இன்று (10) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் படுகாயமடைந்த இருவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காரும் கெப் வாகனமும் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் முள்ளிபொத்தானையைச் சேர்ந்த அலிகான் நௌபர்கான் (38வயது) எனத் தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த இரண்டு பேர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


18 minute ago
22 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
35 minute ago
50 minute ago