2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட இருவர் காயம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை உப்புவெளி பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட இருவர்  படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைமையக பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் ஏ.எம்.டி.ஐ.பண்டார (வயது 46) மற்றும் திருகோணமலை , கேணியடி பகுதியைச் சேர்ந்த கே.சஞ்சயன்(வயது 18) ,அருநேசன் அனஸ்தீன்(வயது 18) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

தலைமையக பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் சார்ஜன்ட மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை பிடிப்பதற்காக வேகமாக சென்ற வேளையில் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் எதிரே வந்த வேனுடன் மோதியதில் அவர்களை விரட்டிச் சென்ற பொலிஸார் மோட்டார் சைக்கிளும் மோதுண்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .