Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2017 ஏப்ரல் 10 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில், இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார் என்று, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளுடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில், திருகோணமலை, முருகாபுரி இலக்கம் 02 இல் வசித்து வரும் கே.பிரியதர்ஷனி (29 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து நிலாவெளி சென்ற வான் அதே பக்கத்தினூடாக சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்பட்ட போது, அலஸ்தோட்டம் கடற்கரைப்பகுதியிலிருந்து திருமலை நகருக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்த பெண்ணுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago