2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வரிய குடும்பங்களுக்கு வீட்டுக்கடன் பத்திரம்

Editorial   / 2018 மே 31 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத். எப்.முபாரக்

திருகோணமலை,   முள்ளிப் பொத்தானை ஈச்ச நகர் வாழும் வரிய குடும்பங்களுக்கு வீட்டுக்கடன்  பத்திரம் வழங்கும் நிகழ்வொன்று நேற்று  (30) மாலை இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  டொக்டர் அருண சிறிசேன இதனை வழங்கி வைத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு மற்றும் நீர்மாணத்துறை அமைச்சர்  சஜீத் பிரேமதாஸ அவர்களினால், கந்தளாய், பேராறு, சேருவில, தம்பலகாமம், சாலியபுர, முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் வாழ் மக்களுக்கு  இரண்டு இலட்சம்  வீட்டுக் கடன் பெறுவதற்கான பத்திரத்தை  டொக்டர் அருண சிறிசேன  அவர்கள் இல்லத்தில் வைத்து 260 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இக்கடனைப் பெறுவதற்கு இலகுவான வழிமுறைகளும் இதன் போது முன்வைக்கப்பட்டதுடன், அடுத்த கட்டமாக வறிய  குடும்பங்களுக்கு சீமெந்தும் மற்றும் 30,000 ஆயிரம் ரூபாவும்  வழங்க உள்ளதாக டொக்டர் அருண  சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இதன்போது, கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் கந்தளாய் இலங்கை வங்கி அதிகாரியும் கலந்துகொண்டனர் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X