Thipaan / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத், பொன்ஆனந்தம்
மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை இடமாற்றம் செய்யக் கோரி, மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்னால் இரண்டாவது நாளாக இன்றும் (14) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தி/ அல்-ஹிலால் மத்திய கல்லூரி பழைய மாணவர்களும் மூதூரில் பிரதேசத்தில் உள்ள 28 சமூக அமைப்புக்களைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டனர்.
அல்ஹிலால் மத்திய கல்லூரியை நேற்றையதினம் மூடி, பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்க்கு எதிராக, ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 07 ஆம் திகதி, மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற கூட்டத்தில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு தொழுகைக்கான நேரம் வழங்கவில்லையெனவும், இது பற்றி பிரஸ்தாபித்த போது, தொழுகை முக்கியமில்லை படிப்புதான் முக்கியம் எனவும் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும் படிப்பித்தால் போதும், படிக்காத மாணவர்களைக் கைவிடவும் என வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்ததாகவும், இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.


10 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
38 minute ago
2 hours ago