Niroshini / 2016 ஜூன் 25 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, புல்மோட்டைப் பிரதேசத்தில் காட்டுமரங்களை வெட்டிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நால்வர், வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காததால் அவர்களை எதிர்வரும் 7ஆம் திகாதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று வெள்ளிக்கிழமை(24) உத்தரவிட்டார்.
குறித்த நபர்கள் திருகோணமலை, புல்மோட்டைப் காட்டுப்பகுதியில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு காட்டு மரங்களை வெட்டிய போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த நால்வருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே குறித்த சந்தேகநபர்கள் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காததால் வியாழக்கிழமை (23) கைத செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நேற்று (24) திருகோணமலை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
6 minute ago
16 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
4 hours ago