எப். முபாரக் / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, குச்சவெளிப் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரை, மே மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, குச்சவெளி சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று (29) உத்தரவிட்டார்.
சந்தேகநபர், புடவைக்கட்டு, குச்சவெளிப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
திருகோணமலையிலிருந்து புல்மோட்டைக்குக் கோழிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை மறித்து, ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்தாரென, பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபருக்கெதிராக மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, சனிக்கிழமை (28) அவர் கைது செய்யப்பட்டாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
18 Mar 2026