2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வாய்க்காலில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

தீஷான் அஹமட்   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு, இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் மிதந்த நிலையில் நேற்று (22) மாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதென, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிவெட்டி, பாரதிபுரத்தைச் சேர்ந்த குணசேகரம் மங்களதீபன் (வயது 30) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

குறித்த வாய்க்காலுக்கு அருகில் துவிச்சக்கர வண்டியொன்று கிடப்பதையும்  வாய்க்காலில் சடலமொன்று மிதப்பதையும் வயலுக்குச் சென்றவர்கள் அவதானித்ததையடுத்து, பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சடலத்தை மீட்ட மூதூர் பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த இளைஞனுக்கு வலிப்பு நோய் உள்ளதென, அவரது தந்தை, பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இளைஞன் வலிப்பு வந்து வாய்க்காலில்  விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பது குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X