2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

விடுதலைப் புலிகளின் சீருடைகளுடன் வெடிபொருட்கள் மீட்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 மே 02 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டி குளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளனவென, கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டுக்குள் விறகு எடுப்பதற்காகச் சென்ற நபர்கள் வழங்கிய தகவலையடுத்து, இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை இரண்டு உட்பட 16 வெடிபொருட்கள், பெரிய பெட்ரி சாஜர், மல்டி பிளக், 4 அடி நீளமான கோட் வயர்  ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன என கோமரங்கடவெல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X