அப்துல்சலாம் யாசீம் / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதி, இக்பால் நகர் பகுதியில் பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் அப்பெண், நேற்று (23) இரவு உயிரிழந்தார் என, நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், அப்துல்ஹமீட் சஹீது உம்மா (வயது 76) எனவும், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் தலைமறைவாகியுள்ளார் எனவும், அவருடன் சென்ற இளைஞனைக் கைது செய்து, மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை, நிலாவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026