2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வீதி விபத்தில் பெண் பலி

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையிலிருந்து கஐூவத்தைக்கு பயணித்த தனியார் பஸ் முச்சக்கர வண்டியுடன் மோதி இன்று(19) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,முச்சக்கரவண்டி சாரதி உட்பட இருவர் காயமடைந்துள்ளதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் கோமரங்கடவெல,கல்கடவெல பகுதியைச்சேர்ந்த கபுறுஹாமிகே சீலாவதி (68வயது) எனவும், சடலம் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலை பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய, பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவெல பொலிஸார்  மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X