Editorial / 2018 மே 25 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பிரதேசத்தில் வீதி விபத்துகளை தடுப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்று இன்று (25) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன் போது, வீதி சமிக்ஞைகள், விபத்துகள் குறித்த விழிப்புணர்வு பதாதைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன.
ஏசியன் பசுபிக் எலயன்ஸ் அமைப்பினரும், கிண்ணியா நகர சபையும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
நிகழ்வில் நகர சபை தவிசாளர், செயலாளர், உறுப்பினர்களான மஹ்தி, நிவாஸ் மற்றும் ஏசியன் பசுபிக் எலயன்ஸ் நிறுவன நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் திருகோணமலை இணைப்பாளர் ஜலால்தீன் நிளாம்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .