2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

Editorial   / 2018 மே 29 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்

திருகோணமலை, மட்டக்களப்பு பிரதான வீதியில் பாலத்தோப்பூர் சந்தியிலிருந்து கிளிவெட்டி பாடசாலை வரையிலான. சுமார் ​ஐந்து கிலோ மீற்றர் வீதியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டும் குழியுமாக உடைந்து காணப்படுவதனால், இவ் வீதியில், தினமும்  போக்குவரத்துச் செய்வதில்  பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும் தெரிவித்துள்ளனர்.

இதனால் இவ்வீதியில், அதிகளவான விபத்துக்கள் ஏற்படுவதாகவும், வாகனங்கள் சேதமடைவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனவே, உரிய அதிகாரிகள் இவ்வீதியை  விரைவில் புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X