2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வீதியை மறித்து மாணவர்கள் ஆர்ப்பட்டம்

Editorial   / 2018 மே 24 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எஸ்.சசிக்குமார்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள், அபயபுரம் சந்தியில் இன்று(24) வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை, அநுராதபுரம் சந்தியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டம், நடைபவணியாக தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, மீண்டும் அபயபுரம் முச்சந்திக்கு வந்தடைந்தது.

தங்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவதாகப் பல தடவைகள் உறுதிமொழி வழங்கியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்து, மாணவர்கள், இவ்வார்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X