Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
தீஷான் அஹமட் / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
35 வயது முதல் 45 வயது வரையிலான வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக, விசேட அமைச்சரவைப் பத்திரம் தயாரித்து, பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக, பிரமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார் என, அப்துல்லா மஹ்ரூப் எம்.பி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (23) சந்தித்து கலந்துரையாடியபோதே, பிரதமர் இவ்வாறு உறுதியளித்துள்ளார் எனத் தெரியவருகிறது.
இதன்போது, தற்போது நாட்டில் பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுநர்களாக இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில், அந்நியமனம் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கவுள்ள நிலையில், 35 - 45 வயதுக்கிடைப்பட்ட பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, அப்துல்லா மஹ்ரூப் எம்.பி கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, 35 - 45 வயதுக்கிடைப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக, விசேட அமைச்சரவைப் பத்திரம் தயாரித்து, பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக, பிரமர் வாக்குறுதியளித்துள்ளார்.
இச்சந்திப்புத் தொடர்பில், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அப்துல்லா மஹ்ரூப் எம்.பி, "கடந்த சில நாட்களுக்கு முன்னர், வேலையற்ற பட்டதாரிகள் என்னைச் சந்தித்து, தங்களின் நிலைமை குறித்து கோரிக்கைகளை முன்வைத்ததையடுத்து, பிரதமரின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றேன்" எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago