Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-பொன் ஆனந்தம்
காணாமல் போனோர் மற்றும் நில மீட்புப் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை தனது ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளது என அப்பேரவையின்; இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார்.
திருகோணமலை விலா விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திலேயே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.
தங்களின் காணாமல் போன உறவுகளைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி, திருகோணமலையில் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனோரின் உறவினர்களை, தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் ஞாயிறு மாலை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் போராட்ட இடத்துக்குச் சென்று, காணாமல் போன உறவினர்களுக்கு தமது ஆதரவையும் ஆறுதலையும் வெளிப்படுத்தியுள்ளனார்.
.jpg)
8 minute ago
40 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
59 minute ago
2 hours ago