2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஹெரோய்ன் வியாபாரி கைது

Editorial   / 2018 மே 17 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, சமுத்ராகமப் பகுதியில், ஹெரோய்ன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர், நேற்று (16) கைதுசெய்யப்பட்டார் என்றும், அவரிடமிருந்து 590 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சமுத்ராகம, கோட்டை வீதி, திருகோணமலையைச் சேர்ந்த உடுப்பு ஹெட்டிகே பிரேமரட்ண (வயது 51) என்பவரே கைதுசெய்யப்பட்டவராவார்.

சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருளும், திருகோணமலை தலைமையகப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X