2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பொதுமக்கள் மீது தாக்குதல்; மூவர் காயம்; 17 பொலிஸார் இடமாற்றம்

Menaka Mookandi   / 2013 ஜூன் 23 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொசன் பௌர்ணமி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 17 உத்தியோகஸ்தர்கள் மாத்தறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேற்படி தாக்குதலுக்கு இலக்கான மூன்றுபேர் மாத்தறை மற்றும் பதீகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திக்வெல்ல, கெமகொட பிரதேச விகாரையில் இடம்பெற்ற பௌர்ணமி தின ஊர்வலத்தின் போது பொலிஸார் என்று கூறிக்கொண்ட குழுவினர், ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் மீது நேற்றிரவு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனால் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமவாசிகளும் அரசியல்வாதிகளும் இணைந்து மாத்தறை – திஸ்ஸமஹாராம பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதுடன் வாகன நெரிசலும் ஏற்பட்டது. இதனையடுத்து, மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 17 உத்தியோகஸ்தர்கள் மாத்தறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0

  • AMBI. Monday, 24 June 2013 06:37 AM

    தற்போது இலங்கையில் குற்றச்செயலில் ஈடுபடுவோர் பொதுமக்கள் அல்ல...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .