2025 மே 02, வெள்ளிக்கிழமை

நாடு திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர் 14பேருக்கு தடுப்புக்காவல்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 28 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 14பேரையும் நாளை திங்கட்கிழமை வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்குமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவர்கள் 14பேரும் நேற்று சனிக்கிழமை நாடு திரும்பிய நிலையில் தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை தங்காலை மேலதிக நீதவான் ரஞ்சன் விஜேசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவினைப் பிறப்பிதுள்ளார்.

தங்காலை - குடாவெல்ல பகுதியில் மீன்பிடி படகை கடத்தியதாகவும் நடுகடலில் வைத்து சிலரை கொலை செய்துவிட்டு அவர்களின் படகை கடத்திச் சென்றதாகவும் மேற்படி நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (கிருஷான் ஜீவக)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X