2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

ஹம்பாந்தோட்டை விடுதியில் தங்கியிருந்த 16 தமிழ் இளைஞர்கள் கைது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 16 இளைஞர்களை ஹம்பாந்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவுஸ்திரேலியா செல்லும் நோக்கத்தில் ஹம்பாந்தோட்டை, மயுரபுர பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .