2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

18 வகையான பாம்புகளை வைத்திருந்த வைத்தியருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 30 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கே உரித்தான 18 வகையான பாம்புகளை தம்வசம் வைத்திருந்த உள்நாட்டு வைத்தியர் ஒருவருக்கும் அவரது உதவியாளருக்கு காலி நீதவான் நீதிமன்றம் இன்று அபராதம் விதித்தது.

இலங்கைக்கே உரித்தான பொல்மல் கரவலா, மலைப்பாம்பு, நாகம் உள்ளிட்ட 18 வகையான பாம்புகளையே இவர்கள் தம்வசம் வைத்திருந்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் மேற்படி பாம்புகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் அவர்களிருவருக்கும் தலா 140,000 ரூபா அபராதம் விதிக்க காலி நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். (சஜீவ விஜேவீர)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .