2025 மே 03, சனிக்கிழமை

தொடங்கொட பிரதேச சபை பட்ஜெட் தோற்கடிப்பு

Super User   / 2011 நவம்பர் 24 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மடவெல)

தொடங்கொட பிரதேச சபையின் அடுத்த வருடத்திற்கான  வரவு செலவுத் திட்டம்  சபை அங்கத்தவர்களால் இரண்டாவது தடவையாகவும் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

சபைத் தலைவர் ஜகத் கீர்த்தி பெரேரா (ஐ.ம.சு.கூட்டணி) சமர்ப்பித்த இவ்வரவு செலவுத்திட்டத்திற்கு வாக்கெடுப்பு நடத்துமாறு சபையின் எதிர்கட்சித் தலைவர் உதித்த  இலேபெரும (ஐ.தே.க.) கோரினார்.

வாக்கெடுப்பு நடைபெற்றபோது ஆளுங்கட்சி அங்கத்தவர்கள் இருவர், எதிர்க்கட்சியான ஐ.தே.க.வுடன் சேர்ந்து பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்தனர். 

இதன்படி பட்ஜெட்டுக்கு ஆதரவாக 6 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் கிடைத்தன.

தம்பல் ஹந்துன்கே, சிறில் பெரனாண்டோ ஆகிய இரு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X