2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

தோள்பட்டையின் கீழ்ப்பகுதியை பதம்பார்த்த மரத்தடி

Menaka Mookandi   / 2012 மார்ச் 08 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிருஷான் ஜீவக ஜயருக்)

14 வயது சிறுவனொருவனின் தோள்பட்டையின் கீழ்ப்பகுதிக்கூடாக உடலில் சுமார் 8 அங்குலம் குத்தப்பட்டிருந்த மரத்தடியொன்றை 45 நிமிட தீவிர சத்திர சிகிச்சைக்குப் பின்னர் வைத்தியர்கள் வெளியேற்றிய சம்பவமொன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.

கூரையிலிருந்து கீழே விழுந்துள்ள இச்சிறுவனின் உடலில் மேற்படி மரத்தடி குத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவனின் உடலில் குத்தப்பட்டிருந்த மரத்தடியுடனேயே அவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதினாலேயே அவனது உயிர் பாதுகாக்கப்பட்டதாக மாத்தறை வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சில அங்குலங்கள் தள்ளி மரத்தடி குத்தியிருக்குமேயானால் சிறுவனின் இதயத்தினை பாதித்திருக்கும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர். மாத்தறை, யட்டியன, கோட்டவத்தை பகுதியைச் சேர்ந்த பசிந்து மதுஷான் என்ற சிறுவனின் உடலிலிருந்தே மேற்படி மரக்குற்றி அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .