2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பிரித்தானிய பிரதி உயர் ஸ்தானிகர் தென் மாகாணத்திற்கு விஜயம்

Super User   / 2012 ஜூன் 13 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென் மாகாணத்திற்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர் ஸ்தானிகர் ரொபி பலூச் கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ஹம்பாந்தோட்டை, தங்காலை, மாத்தறை, அஹங்கம மற்றும் ஆகிய பிரதேசங்களில் பல துறைகளில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி பற்றியும் ஐக்கிய இராச்சிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களினால் மேற்கொள்ளப்படும் ஆரரவு பற்றியும் பிரதி உயர் ஸ்தானிகர் இதன்போது அறிந்துகொண்டார்.

தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ரசபுத்ர, தென் மாகாண கடற்படை தளபதி, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஹம்பாந்தோட்டைக்கான இந்திய கொன்ஸியூலர் ஜெனரல் ஆர்.ரகுநாதன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

அத்துடன் கடந்த டிசம்பர் 25ஆம் திகதி தங்காலையில் வைத்து பிரித்தானிய பிரஜை குறம் சைக் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சென்ற இவர் தனது மாரியதையும் செலுத்தினார்.

ஹம்பாந்தோட்டையிலுள்ள புதிய விமான நிலையம் மற்றும் துறைமுக ஆகியவற்றின் நிர்மாண வேலைகளையும் பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது பிரித்தானிய பிரதி உயர் ஸ்தானிகருடன் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திலுள்ள அதிகாரிகளின் தூதுக்குவொன்றும் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .