2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கட்டுவான துப்பாக்கிச்சூடு குறித்து கண்டறிய பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை தேடுதல்

Menaka Mookandi   / 2012 ஜூன் 17 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாந்தோட்டை, கட்டுவான பிரதேசத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபர்களை கண்டறிவதற்காக பாரிய தேடுதல் வேட்டையொன்று நடத்தப்படுகிறது.

இந்த தேடுதல் வேட்டையில் பொலிஸாருடன் இணைந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார், சம்பவத்தை நேரில் கண்டவர்களில் 25பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபர்களை அடையாளம் காட்டுவதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

மேற்படி கூட்டத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் குழுவொன்று ரீ – 56 ரக துப்பாக்கியினால் நடத்தப்பட்ட சூட்டின் போது பெண்ணொருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.

அத்துடன், கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்தவர்களின் வாகனங்கள் பலவும் சம்பவத்தின் பொது சேதங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (சுபுன் டயஸ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .