2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கட்டுவன கொலைகளுக்கு எதிராக பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு

Menaka Mookandi   / 2012 ஜூன் 18 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாந்தோட்டை, கட்டுவன பிரதேசத்தில் கொல்லப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் இருவரின் இறுதிச் சடங்கு இன்று திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்நிலையில், மேற்படி கொலைச் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களையோ அல்லது பேரணிகளை நடத்த வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு மனுவினைக் கருத்திற் கொண்ட நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

எதிரிமான்னகே மாலனி (வயது 51) மற்றும் நிமந்த ஹேஸான் (வயது 18) ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது கொல்லப்பட்டனர்.

கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியினரின் கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த போது அங்கு வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தின் போது இவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (கிருஷான் ஜீவக ஜயருக்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .