2025 மே 02, வெள்ளிக்கிழமை

அக்குரஸ்ஸ பிரதேச சபைத் தலைவர் பிணையில் செல்ல அனுமதிப்பு

Super User   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுமிகள் இருவரை  துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கடந்த 73 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அக்குரஸ்ஸ பிரதேச சபைத் தலைவர் சூரவெவ லியனகே சுனில் மற்றும் பிரியங்க இந்துனில் விக்கிரமசிங்க ஆகியோர் பிணையில் செல்வதற்கு மாத்தறை பிரதம நீதவான் உதேஷ் ரணதுங்க இன்று அனுமதியளித்தார்.

சூரவெவ லியனகே சுனில் ஒரு வழக்கில்  5000 ரூபா ரொக்கப் பிணையிலும் 25,000 ரூபா சரீரப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டார். மற்றொரு வழக்கில் இரு மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டார். (கிருஷான் ஜீவக ஜயருக்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X