2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது பரீட்சார்த்த விமானம் தரையிறக்கம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான ஹம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, முதலாவது பரீட்சார்த்த  விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமான நிலையத்தின் பயண கட்டுப்பாட்டு உபகரணங்களை பொருத்துவதற்காகவே இந்த பரீட்சார்த்த விமானம் தரையிறக்கப்பட்டதாக மத்தல விமான நிலைய உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் நாட்டு சிவில் விமான சேவைக்கு சொந்தமான அதி விசேட விமானம் கொழும்பிலிருந்து இரண்டு பாகிஸ்தான் விமானிகள்;;;, இரண்டு விமான படை விமானிகள்;;; மற்றும் விமான நிறுவன சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன விக்கிரமசூரிய ஆகியோர்களுடன் மத்தலை விமான நிலையத்தின் ஓடு பாதையில் தரை இறங்கியது. (எம்.இஸட்.எம். இர்பான்)


  Comments - 0

  • ஜோசியன் Tuesday, 16 October 2012 09:20 AM

    பொதுமக்கள் வரிப்பணம் விரயம்....வெள்ளை யானையாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அடுத்து விமான நிலையம்......?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .