2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

மின்சார வேலியில் சிக்கி சிறுமி பலி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 25 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயிர்கள் சேதப்படுத்துவதை தடுப்பதற்காக காட்டுப் பன்றிகளுக்கு வைக்கப்பட்ட  சட்டவிரோதமான மின்சார வேலியில் சிக்குண்டு 12 வயதான சிறுமி ஒருவர்  பலியாகியுள்ளார்.

மாத்தறை யட்டியான என்னும் இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுமி ஆடைகளை கழுவுவதற்காக வயல்வெளிக்கு அருகில் உள்ள கிணற்றடிக்குச் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளார். இவர் ஆடைகளை கழுவிவிட்டு வயல்வெளியில் விழுந்து கிடந்த தேங்காய்களைப் பொறுக்குவதற்காக சென்றுள்ளார். இதன்போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

யட்டியான மகா வித்தியாயத்தில் கல்வி கற்கும் இந்த மாணவியின் தந்தை மேசன் தொழிலாளி என்பதுடன், தாயார் புற்றுநோயாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுப்பன்றிகளை தடுப்பதற்காக இந்த சட்டவிரோத மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த மின்சார வேலியை அமைத்த சந்தேக நபர் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.  (கிரிஷான் ஜீவக ஜயரூக்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .