2025 மே 02, வெள்ளிக்கிழமை

மல்ஹருஸ்ஸூல்லியா மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் அமைச்சர் ஹக்கீம்

Super User   / 2012 நவம்பர் 29 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


காலி, மல்ஹருஸ்ஸூல்லியா மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் ஐ.எம்.எம். யூசுப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்கார, முன்னாள் காலி மேயர் பவுஸ் நியாஸ் மற்றும் மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.எம். நிலாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தென்னிலங்கையில் 97 வருட பழமை வாய்ந்த இந்த கல்லூரியின், பரிசளிப்பு விழா  இருபது ஆண்டுகளின் பின்னர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பேருவளை - மஹகொடை பிரதேசத்தில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று ஐ.எல்.எம். நலன்புரி நிலையம் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நிலையத்தின் தலைவர் அஹமட் ரூமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேருவளை பிரதேச கல்விமான்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஐ.எல்.எம். நலன்புரி நிலையத்தின் வளர்சிக்காக அச்சிடப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான கலண்டர்களும் விநியோகிக்கப்பட்டன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X