2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தென்பிராந்திய வான்பரப்பில் அதிசய கோள்?

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னொருபோதும் காணாதளவு பிரகாசத்துடன் கூடிய கோள் ஒன்றை தென்பிராந்திய வான் பரப்பில் காண முடிந்ததாக அம்பலாந்தோட்டை பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் காணக்கூடியதாக இருந்த மேற்படி கோளானது, மிகப்பெரிய நட்சத்திரம் போன்று அதிகளவு பிரகாசத்துடன் தோற்றமளித்துள்ள போதிலும் நள்ளிரவு 12 மணியளவில் அதன் பிரகாசம் சாதாரண நட்சத்திரத்தின் பிரகாசமளவுக்கு குறைவடைந்ததாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர்.
 
அத்துடன், மேற்படி கோள் இன்று அதிகாலையளவில் தொலைதூரத்துக்கு பயணமாவதை அவதானிக்க முடிந்ததெனவும் அம்மக்கள் தெரிவித்தனர்.

சாதாரண கண்களால் பார்க்குமிடத்து அக்கோள் மினுமினுப்பதைப் போன்றும் கமராவொன்றின் மூலம் பார்க்குமிடத்து இளம் நீல நிற ஒளியுடன் அது தொலைதூரத்துக்கு பயணித்துக்கொண்டிருப்பதைப் போன்றும் தோற்றமளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. (சனத் கமகே)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .