2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஹம்பாந்தோட்டை வழமைக்கு திரும்பியது

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம். இஸட். எம். இர்பான்)

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிலவிய வெள்ளம் வடிந்தோடியுள்ள நிலையில் அந்த மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமது வியாபார நிலையங்களையும், வீடுகளையும் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டமெங்கும் 6934 குடும்பங்களைச் சேர்ந்த 37444 பேர் பாதிக்கப்பட்டு 25 முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு 750 ருபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள ;வழங்கப்படவுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியாரும் உதவிகளை வழங்கி வருவதோடு அரசாங்கத்தினால் கிராம சேவகர் மூலமாக கிடைக்கவேண்டிய உதவிகள் தங்களது பிரதேசங்களுக்கு கிடைக்கவில்லை என மெலே கொலனி மக்கள் தெரிவித்தார்.

நிவாரணங்கள் வழங்கப்படுவதில் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலாளரிடம் அந்த மக்கள்  முறைப்பாடு செய்துள்ளனர். இத்தோடு பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் துப்பரவு செய்யும்பணிகளை மேற்கொள்வதற்கு தொண்டர்களை எதிர்பார்க்கின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .