2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

படகு கவிழ்ந்ததில் அறுவரை காணவில்லை: 22 பேர் மீட்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

படகு ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த போது அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  அதிலிருந்தவர்களில் அறுவரை காணவில்லை என்றும் 22 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

கதிர்காமம் திஸ்ஸமாரகம திஸ்ஸ வாவியிலேயே இந்த சம்பவம் இன்று   சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

படகு கவிழ்ந்தபோது அதில் 28 பேர் இருந்ததாகவும் 22 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காப்பாற்றப்பட்ட 22 பேரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை தேடும் பணிகளில் கடற்படையினர்,சுழியோடிகள் மற்றும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

10 பேர் பயணிக்க வேண்டிய படகிலேயே 26 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த படகில் பயணித்தவர்கள் இங்கிரிய மற்றும் ஹொரனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .