2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வீரவன்சவுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வேன்: மைத்திரி

Kanagaraj   / 2013 ஜனவரி 05 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வேன். என தென்மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.

தனியார் ஊடகம் ஒன்றின் ஊடாக நீதிமன்றத்தை பகிரங்கமாக விமர்சித்து நீதிமன்றத்தை அவமதித்தமைக்கு எதிராகவே அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் இந்த உரையினால் நீதிமன்றம் தொடர்பில் மக்கள் நம்பிக்கையிழந்து விடுவதுடன் நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற தீர்ப்பின் மீது மக்கள் நம்பிக்கைகொள்ள முடியாத நிலைமையொன்று ஏற்படும். அத்துடன் நாடும் பாதுகாப்பற்ற நிலைக்கு சென்றுவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காலியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • meenavan Saturday, 05 January 2013 05:23 PM

    அவர் வீரவன்ச அல்ல ஒரு .....வன்ச

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .