2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் தாயும் தந்தையும் பலி; இரு பிள்ளைகளும் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 27 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

லுனுகம்வெஹெர, ரணவரனாகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் தாயும் தந்தையும் உயிரிழந்துள்ளதுடன் ஏழு மற்றும் நான்கு வயதுகளையுடைய இரு பிள்ளைகளும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் தந்தையுமே உயிரிழந்துள்ளனர். அவர்களின் இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர்.

அம்பாந்தோட்டை பொலிஸார் இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .