2025 மே 02, வெள்ளிக்கிழமை

வெஹெரகல நீர் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு

Super User   / 2013 பெப்ரவரி 14 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எப்.எம்.தாஹிர்


கதிர்காம மாணிக்க கங்கைக்கு அண்மித்த வெஹெரகல நீர் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் ஒரு அடிக்கு இன்று வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம நீர்பாச பொறியியலாளர் அமரஜீவ லியனகே தெரிவித்தார்.

மொனராகல மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக வெஹெரகல நீர்தேக்கம் நிரம்பியுள்ளது. வெஹெரகல நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணிக்க கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் மாணிக்க கங்கையில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிரி சந்திமால் தெரிவிக்கின்றார்.

வெஹெரகல நீர்தேக்கத்தின் ஆறு கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது மாணிக்க கங்கை உள்ளிட்ட பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏக்கருக்கு 1,500 அடி கன லீட்டர் நீர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .