2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

வடக்கிற்கு சமாதான பேரணி: ஜனாதிபதியும் பங்கேற்பு

Kanagaraj   / 2013 மார்ச் 06 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கிலிருந்து வடக்கிற்கான சமாதான பேரணி இன்று ஆரம்பமானது. இந்த சமாதானப்பேரணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்துக்கொண்டார்.

வெற்றிக்கொண்ட சமாதானத்தை உறுத்திப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே இந்த சமாதானப்பேரணி கதிர்காமத்தில் இன்று ஆரம்பமானது.

திபெத் ஆன்மீகத்தலைவர் சாகல்ய கியல்வங்கின் தலைமையில் ஆரம்பமான பேரணிக்கு ஜனாதிபதி செயலகம், இலங்கை இளைஞர் சமுதாய சம்மேளம், இளைஞர்களுக்கான நாளை மற்றும் ஊவா மாகாண சபை இதற்கு ஆதர்வு நல்கியுள்ளது.

இந்த பேரணியில் ஊவா மாகாண முதலமைச்சர்  சஷீந்திர ராஜபக்ஷவும் இணைந்துக்கொண்டார்.

அத்துடன் இந்தியா,நேபாளம்,இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச்சேர்ந்த மதத்தலைவர்களும் இந்த பேரணியில் இணைந்துகொண்டதுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தைச்சேர்ந்த 1500 இளைஞர் யுவதிகளும் இணைந்துக்கொண்டனர்.


  Comments - 0

  • குட்டி Wednesday, 06 March 2013 10:18 AM

    நீயாயமான அரசியல் தீா்வு ஒன்றை முன்வைத்தால் இனங்களிடையே சமாதானம் ஏற்படுமே. சும்மா சமாதான பேரணி, நடைபவணி எண்டு காலத்தை கடத்தி உலகத்தை ஏமாற்ற வேண்டாம்.

    Reply : 0       0

    vallarasu Thursday, 14 March 2013 08:30 AM

    வியட்னாம் மதத்தலைவரே... முதல்ல உங்க நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துங்கோ.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .