2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஆதரவாளர்களை சிறையிலடைத்து பயணத்தை தடுக்க முடியாது: ரணில்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 12 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களை சிறையிலடைத்து எமது பயணத்தை தடுக்கமுடியாது என்று ஐக்கிய தேசியக்கட்சித்தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களில் இரண்டு குழுக்களுக்கிடையே மாத்தறையில் இடம்பெற்ற மோதலையடுத்து கைது செய்யப்பட்டு மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆதரவாளர்களை சந்தித்ததன் பின்னர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாத்தறை சிறைச்சாலைக்கு இன்று சனிக்கிழமை சென்ற ரணில் விக்ரமசிங்க அங்கு 20 நிமிடங்கள் இருந்தார். அவருடன் மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் பதவியிலிருந்து ரணிலை பதவிலக்குமாறு கோரி தெவிநுவரவிவிலிருந்து கொழும்பை நோக்கிய பாதயாத்திரையின் போது கடந்த சனிக்கிழமை இருதரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .