2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

946 ட்ரக்டர் கொள்வனவிற்கு ஐப்பான் நிதியுதவி

Super User   / 2012 ஜூன் 12 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உதவி தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் வட பகுதியிலுள்ள இரண்டு விதை உற்பத்தி பண்ணைகளின் பயன்பாட்டுக்கும் 946 ட்ரக்டர்களை கொள்வனவு செய்ய சுமார் 468 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக உணவு பாதுகாப்புக்கான ஜப்பானிய நன்கொடை உதவி திட்டத்தின் கீழ் ஐப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இவற்றில் 896 இரண்டு சக்கர ட்ரக்டர்களும் 50 நாற் சக்கர ட்ரக்டர்களும் அடங்கும்.. இதில் இரண்டு சக்கர ட்ரக்டர்கள் 53, நாற் சக்கர ட்ரக்டர்கள் 2 ஆகியன தென் மாகாண விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

மாத்தறையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இரண்டு சக்கர ட்ரக்டர்கள் ஐந்து விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நுபுஹிட்டோ ஹோபோ மற்றும் ஜெய்காவின் இலங்கைக்கான பிரதிநிதி ஹறுமி எயோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நன்கொடைக்கு மேலதிகமாக இன்னுமொரு உதவி திட்டத்தின் கீழ் முருங்கன் மற்றும் பரந்தன் ஆகிய இடங்களிலுள்ள இரண்டு அரசாங்க விதை பண்ணைகளை அபிவித்தி செய்வதற்கு 157 மில்லியன் ரூபாவை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .