2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

உட்கட்சி மோதல்களில் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகம நகரப்பகுதியில், ஒரு கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற மோதலில் குறைந்தது மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கட்சியின் இடையே நிலவும் வேறுபாடுகள் தொடர்பாக, முச்சக்கரவண்டி சாரதிகளிடையே இடம்பெற்ற கோபாவேசமான வாக்குவாதத்தை அடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளார் பதில் பொலிஸ் அத்தியகட்சகர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார். 

காயமடைந்தவர்கள், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .